Home இந்தியா தமிழகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் கடலில் மூழ்கி பலி

தமிழகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் கடலில் மூழ்கி பலி

by Jey

இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற தமிழகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியாவிற்கும் கடந்த 1 ஆம் திகதி மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.இதையடுத்து இருவரும் திருமணம் முடிந்த கையோடு இந்தோனேசியாவிற்குத் தேனிலவு சென்றனர்.

அங்கு பாலி தீவில் உள்ள கடலில் மோட்டார் படகில் சென்ற போது இருவரும் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.அப்போது இருவரும் படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர்.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர்.

ஆனால் லோகேஸ்வரன் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். விபூஷ்னியாவை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தகவல் விபூஷ்ணியா வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அவரது வீட்டின் முன்பு உறவினர்களும், பெற்றோர்களும் கூடி கதறி அழுதனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்து போன புதுமண ஜோடியின் உடல்களை சென்னைக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.

related posts