Home உலகம் டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண்

டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண்

by Jey

ரஷ்யாவில் கணவர் வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்ததோடு பேசாமலும் இருந்துள்ளார்.

இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார்.

தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை நன்றாக ருசித்து வந்த யானா போப்ரோவா ‛டயட்’ என்ற பெயரில் பிடித்த உணவுகளை புறம்தள்ளினார்.

இருப்பினும் கூட அவரது கன்னம் குண்டாக இருப்பதாகவே கணவர் கூறி வந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தீவிர டயட் உணவை கையில் எடுத்துள்ளார்.இந் நிலையில் அவர் உணவை சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது நீண்டநாட்களாக அவர் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் பட்டினி கிடந்ததன் விளைவு என்பது அவரை எலும்பும், தோலுமாக மாற்றி உள்ளது.

இந்நிலையில் தான் என்டிவியின் டாக் ஷோ நிகழ்ச்சியில் யானா போப்ரோவா பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானா போப்ரோவா ஆள் அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ளார்.

related posts