Home இந்தியா கருணாநிதி சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் மு.க.ஸ்டாலின்

by Jey

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று காலை சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து ரூ.96 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சேலத்தில் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,367 கோடி மதிப்பிலான 390 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்., ரூ.235.81 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சேலத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தது மன நிறைவை தருகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று. கருணாநிதி சிலையை திறந்து வைத்த மனநிறைவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

கருணாநிதி திரைத்துறையில் முழுநேர வசன கர்த்தாவானது சேலத்தில் தான். சேலத்துக்கும், கருணாநிதிக்கும் அன்பான நட்பு, குடும்ப நட்பு உள்ளது.

 

related posts