கனடாவில் எட்மோன்டன் பகுதியில் அதிவேகமாக பயணம் செய்த டெஸ்லா ரக வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் மூன்று உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக சென்ற டெஸ்லா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடை சாய்ந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.