கனடாவின் முதல் முறையாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் முதல்வரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.
கனடிய தபால் திணைக்களத்தினால்; இந்த அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.
1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையில் கனடாவின் வடமேற்கு நிலப்பரப்பின் முதல்வராக கடமையாற்றிய நெல்லி கோர்நோயா இவ்வாறு கௌரவிக்கப்பட உள்ளார்.
கோர்நோயாவின் நாட்டுக்கு வழங்கிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த அஞ்சல் முத்திரை வெளியிடப்பட உள்ளது.
இந்த மாதம் 21ம் திகதி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் முத்திரை வெளியிடப்பட உள்ளது.