Home கனடா கனடிய பாடசாலைகளில் அலைபேசிகளுக்கு தடை

கனடிய பாடசாலைகளில் அலைபேசிகளுக்கு தடை

by Jey

கனடிய பாடசாலைகளில் அலைபேசிகளுக்கு தடை விதிக்கும் யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் ஏற்கனவே மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலைபேசிகள் மாணவர்களின் கவனத்தை சிதறச் செய்வதாகவும், அவர்களது உளச் சுகாதாரத்தை பாதிப்பதாகவும் ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியர் சச்சின் மஹாராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் படங்கள் மட்டுமன்றி ஆழமாக சிந்திக்கும் திறனை விருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அலைபேசிகள் இந்த ஆற்றல்களை குறைக்கும் வகையிலானவை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் சில பாடசாலைகளில் அலைபேசி பயன்பாட்டுத் தடை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அலைபேசிகளை தடை செய்வது பொருத்தமற்றது என சில பெற்றோரும் மேலும் சில தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

அலைபேசி ஊடாக கற்றல் நடவடிக்கைகளை விருத்தி செய்து கொள்ள முடிவதாகவும் ஆபத்துக்களின் போது வீட்டை தொடர்புகொள்ள முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

related posts