Home இந்தியா குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

by Jey

அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

related posts