கனடாவின் டொரான்டோ மாநகர முதல்வர் வேட்பாளர் ஒலிவியா ச்சோவிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பீடு செய்யும் போது ச்சோவ் இன்னமும் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2ம் திகதி ச்சோவிற்கு 38 வீத ஆதரவு காணப்பட்டதாகவும் தற்பொழுது அது 35 வீதமாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒலியாவிற்கு எதிராக போட்டியிட்டு வரும் ஏனைய சில வேட்பாளர்களுக்கான மக்கள் ஆதரவு சிறிதளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.