கியூபெக் பகுதியில் கடந்த வாரம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் நோவா ஸ்கோடியா நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை கியூபெக் பிராந்திய பொலிசார் குழந்தை ஒன்று மாயமானது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர். மட்டுமின்றி, அந்த நபர் தொடர்பில் நலம் விசாரிக்கவும் பொலிசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாண்ட்ரீலுக்கு கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர்கள் அப்பால் Saint-Louis-de-Blandford பகுதியில் அந்த நபர் குழந்தையுடன் வாகனம் ஒன்றில் பயணிப்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.