முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களை அவ்வப்போது நியமிப்பதும் அதன் பின்னர் அவர்களை மாற்றம் செய்வதும் போன்ற நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ சேவையினை மக்கள் முழுமையாக இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், இது போன்ற இடமாற்ற நடவடிக்கைகளை நிறுத்தி சரியான முறையில் சேவையினை வழங்கக்கூடிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இயங்க வேண்டும் என அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.