பிரபல நடிகர் திர்தானந்த் ராவ் பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்களால் ஜுனியர் நானா படேகர் என அழைக்கப்படுபவர் நடிகர் திர்தானந்த் ராவ்.
திரைப்படங்களில் சிறிய வேடங்களில நடித்து வரும் இவர் கபில் சர்மா ஷோ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.சமூக வலைதளங்களில் நேரலையில் ரசிகர்களுடந் பேசிய அவர், தனது நிலைக்கு ஒரு பெண் தான் காரணம் எனவும் தனக்கு எதாவது நேர்ந்தால் அந்தப் பெண் தான் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
மேலும் அந்தப் பெண் தன்னை மிரட்டுவதாகவும், தன்னிடமிருந்து பணம் வாங்கியதாகவும் அந்தப் பெண்ணால் ரூ.3-4 லட்சம் கடனாளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் திரவத்தை ஊற்றி குடித்திருக்கிறார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியான அவரது நண்பர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றபோது நினைவிழந்த நிலையில் இருந்த அவரை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையில் திர்தானந்த் தற்கொலை முயற்சி குறித்து அவர் குறிப்பிட்ட பெண்ணிற்கு பொலிஸார் தகவல் கொடுத்தனர்.
அப்போது அந்த பெண், அவன் சாகட்டும், நான் எப்படியும் அவனைத் கைவிட தான் போகிறேன் என பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.