ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 33). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்தவர் ஆவார்.
இவர் வாலிபர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்துள்ளாா். மேலும் அவர்களுக்கு ரகசிய ஆயுத பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.
தெலுங்கானாவில் பி.எப்.ஐ. அமைப்பினர் மற்றும் வாலிபர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இதுபற்றி அறிந்ததும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும் முகமது யூனுஸ் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.