அமெரிக்காவில் வீட்டில் திருடுபோவதாக கனவு கண்ட நபர் உறக்கத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அமெரிக்காவின் இலியானிஸ் மாகாணத்தின் லேக் பாரிங்டன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டிகாரா.
இவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது அவர் தெரிவித்த பதில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
62 வயதான இவர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இவருக்கு கனவு வந்துள்ளது. அதில் தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து களவாடுவது போல கனவு கண்டுள்ளார்.
தூக்கத்திலேயே திருடர்களை தாக்குவதாக எண்ணி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது காலிலேயே சுட்டுக்கொண்டுள்ளார்.
குண்டு பாய்ந்து காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், வலியில் மார்க் திடுக்கிட்டு விழித்துள்ளார். காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்துதோடிய நிலையில் மார்க் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இதற்குள்ளாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தனது கனவு குறித்து மார்க் கூறவே, அக்கம் பக்கத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அங்கு திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்தது.