Home இந்தியா சென்னையில் இருந்து காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவை

சென்னையில் இருந்து காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவை

by Jey

இந்தியாவின் சென்னையில் இருந்து காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இந்தியா ஆய்வு கப்பல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆய்வு கப்பலை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவின் சென்னை துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது இந்திய, இலங்கை உறவுகளை விரிவுப்படுத்தும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பலின் வருகையுடன் 25 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் விசா அனுமதியுடன் சாதாரண குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் பதிவு செய்துக்கொண்ட பின்னர் பயணிகள் கப்பல் மூலம் சென்னை வரை பயணிக்க முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

related posts