ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை செலுத்தி தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்தது.
இதனால் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த சட்டம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
இந்த சட்டம் ராணுவ செலவினங்களுக்காக வரி அல்லாத வருவாய் ஆதாரங்களை வழங்க வழிவகை செய்கிறது.
இதற்காக பெருநிறுவனங்களின் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு செலவினம் சுமார் ரூ.26 லட்சம் கோடியாக உயரும் என அரசாங்கம் கணித்துள்ளது.