இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கெம்பெர்வல் நகரில் சவுத்ஆம்டன்வெ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் (வயது 38) என்பவர் வசித்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த மேலும் சிலருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அரவிந்த் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த சலீம் என்பவரே அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கடந்த ஒரே வாரத்தில் இங்கிலாந்தில் இதுவரை 3 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இங்கிலாந்து குடியுரிமைபெற்ற இந்தியராக கிரேஷ் ஒ மெலி குமார் (வயது 19) என்ற இளைஞரும், ஐதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வின் என்ற இளம்பெண்ணும் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது