இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தெலங்கானாவின் வாரங்கலை சேர்ந்தவர் 23 வயதான ஸ்ரீனிவாஸ்.பட்டப்படிப்பு படித்துள்ள இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.
ஸ்ரீனிவாஸுக்கும் 22 வயதான திருநங்கை பிங்கி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது.நட்பானது பின்னர் காதலாக மாறியது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று ஸ்ரீனிவாஸ் – பிங்கி ஜோடிக்கு சிவன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.