Home உலகம் நேபாளத்தின் கிழக்கு பகுதியில்,கனமழையால் வெள்ள பெருக்கு

நேபாளத்தின் கிழக்கு பகுதியில்,கனமழையால் வெள்ள பெருக்கு

by Jey

ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களில் 25 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

related posts