இந்த அரசாங்கம் பல முக்கியமான பொது நிறுவனங்களை தானியார் மயப்படுத்துவதில் மாத்திரமே அக்கறையாக இருக்கின்றார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (17.06.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்வேறுபட்ட தனியார் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கோ அல்லது பாரிய வர்த்தகர்களுக்கோ விற்று அதில் வரும் பணத்தைக்கொண்டு நாட்டை நடத்துவது என்பது தொடர்பில் பேசப்படுகிறது.
அது மாத்திரமல்லாது, வியாபாரம் என்பது அரசங்கத்தின் தொழில் அல்ல. அது தனிப்பட்ட நபருடைய தொழிலாகும். வியாபாரத்தை அவர்களிடமே விட்டு விட வேண்டும் என்ற தொனியில் அரசாங்கம் பேசுகிறது.