உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டரை தன்வசப்படுத்தினார்.
அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். டுவிட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், டுவிட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது.
டுவிட்டரில் ஒரு மணிநேரம் ஓட கூடிய வீடியோவை என்னால் காண முடியவில்லை என பதிவிட்டு உள்ளார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.