லூதியானா மாவட்டத்தில் பஞ்சாப் மாநிலம் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 10ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுதமேந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப் கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இந்த தம்பதியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். தம்பதி இருவரும் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் விரைந்த போலீசார் ஷமோலி மாவட்டத்தில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகிப் சென்றனர்.
அங்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் த