Home இலங்கை காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சி

காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சி

by Jey

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கான அளவீடு பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று (19.06.2023) ஆரம்பமாகியுள்ளது.

2013ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடைமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளாக சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6,300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டுக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்றமையினால், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இதற்காகக் குறித்த காணி அளவீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்குக் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யுத்தம் காரணமாக இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

related posts