வெளிநாடுகளில் சென்று குடியேற வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் நமது கனவிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது பணம் மட்டுமே.
நடுத்தர மக்கள் அனைவருக்கும் வெளிநாட்டு பயண ஆசை இருந்தும் பணம், குடியுரிமை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அந்த கனவு தகர்ந்து போகிறது.
ஆனால் ஒரு நாடு உங்களுக்கு குடியுரிமையும் தந்து அங்கு குடியேறுவதற்கு பணமும் தருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு அறிவிப்பை தான் அயர்லாந்து அரசு வெளியிட்டு உள்ளது.