ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஹவுன்ஸ்லோவில் உள்ள வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்களை பொலிஸார் கைப்பற்றினர்.
35 வயது Monika Wlodarczyk, இவரது கணவரான 39 வயது Michal Wlodarczyk, இவர்களின் பிள்ளைகள் Maja(11), மற்றும் Dawid(3) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் Monika உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பதியின் குழந்தைகளின் பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இந்த மரணங்களை கொலை வழக்காக கருதி விசாரிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்