Home கனடா கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி

கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி

by Jey

புலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். மனித இனத்தில் மட்டுமல்ல, அது பறவை இனங்களில் கூட காணப்படும் ஒரு இயற்கை நிகழ்வு.

இன்று புலம்பெயர்தல் எதிர்மறையான ஒன்றாக சில நாடுகளால் காட்டப்படுகிறது. ஆனால், உலகம் என்னும் சமுதாயத்திற்கு புலம்பெயர்தல் என்பது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும்.

புலம்பெயர்வோர் ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.

அதே நேரத்தில், அந்த நாட்டின் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், இந்த புலம்பெயர்ந்தோரால், தங்கள் நாட்டின் வருவாய் மட்டுமல்ல, தாங்கள் வேலை செய்யும் அந்நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கனடா ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இம்மாதம், அதாவது ஜூன் மாதம் 16ஆம் திகதி, மதியம் 3.00 மணியளவில் கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனைத் தொட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இது கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியாகும் என்கிறார் கனடாவின் தலைமை புள்ளியியலாளரான Anil

related posts