பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் தொடராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய போலீசார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
கனடாவின் முன்னணியை பொறியியல் நிறுவனம் ஒன்றான SNC-Lavalin என்ற நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
லிபியாவின் நிறுவனம் ஒன்றுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டபோது மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்த உள்நாட்டு விசாரணைகளில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் பிரதமர் ட்ரூடோ அரசியல் ரீதியான தலையீடு மேற்கொண்டார் என கனடிய ஒழுக்க விதி கண்காணிப்பு நிறுவனம் குற்றம் சுமத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.