Home கனடா டைடானிக் கப்பலை இடிபாடுகளை பார்வையிடச் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்

டைடானிக் கப்பலை இடிபாடுகளை பார்வையிடச் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்

by Jey

அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகள் காணாமல் போய் உள்ளனர்.

நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் ஊடாக இந்த சுற்றுலா பயணிகள் குறித்த பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் இருந்து இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறினும் பயணம் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் இந்த நீர்மூழ்கியைக் கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பலில் ஒரு மாலுமியும் நான்கு சுற்றுலாப் பயணிகளும் பயணித்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 மீட்டர் ஆழத்தில் இந்த டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள் காணப்படுகின்றன.

குறித்த பகுதிக்கு சென்று தகவல்களை திரட்டிக் கொள்வதற்காக இந்த சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்துள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கனடிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 96 மணித்தியாலங்கள் வரையில சுவாசிப்பதற்கான ஆக்சிசன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts