தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அண்மையில் அளித்த பேட்டியில், தருமபுரியின் பாலக்கோடு வட்டம், திருமல்வாடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கெசர்குளிஅல்லா ஆற்றின் குறுக்கே தடுப்பணை முழுவதுமாக நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கேசர்குளிஅல்லா அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.
பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.