Home இலங்கை முல்லைத்தீவில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் சித்திரவதை

முல்லைத்தீவில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் சித்திரவதை

by Jey

முல்லைத்தீவில் வசிக்கும் பொதுமகன் ஒருவர் தாம் கடந்த வாரம், இலங்கை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஜூன் 14 ஆம் திகதி, வேட்டை இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் தமது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் பின்னர் தாம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு
அத்துடன் தமது விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து தற்போது காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து விபரங்களை கேட்டறிந்து கொண்டார்.

related posts