பிரதமர் மோடி இன்று அவர் நியூயார்க்கில் ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக புறப்பட்டுச்சென்றார். இரு தரப்பு உறவை இந்தப்பயணம் வளப்படுத்தும் என அவர் கூறி உள்ளார்.
இன்று அவர் நியூயார்க்கில் ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதற்காக நேற்று காலை சுமார் 7 மணியளவில் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச்சென்றார்.
பின்னர் அமெரிக்காவுக்கான அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்றிரவு நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.