Home கனடா கனடாவில் விசேட தேவையுடையவர்களுக்கு நலன்புரித் திட்டம்

கனடாவில் விசேட தேவையுடையவர்களுக்கு நலன்புரித் திட்டம்

by Jey

கனடாவில் விசேடதேவையுடையோர் நலன்புரி குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பில் சீ-22 என்ற இந்தச் சட்டமூலத்தை தொழில் வாய்ப்பு, ஊழியப்படை அபிவிருத்தி மற்றும் விசேட தேவையுடையோர் நலன் துறை அமைச்சர் கார்லா குவால்த்ரூ இதனைத் தெரிவித்துள்ளார்.

உழைக்கும் வயதினை உடைய குறைந்த வருமானம் ஈட்டும் விசேட தேவையுடையோருக்கு மத்திய அரசாங்கத்தின் நிதி உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியமான ஓர் நகர்வாக இதனைக் கருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

related posts