Home இலங்கை நாட்டில் ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எந்த தேவையும் இல்லை

நாட்டில் ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எந்த தேவையும் இல்லை

by Jey

ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவொன்றே உருவாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நேற்றைய தினம் (21.06.2023) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடக ஒழுங்குமுறைக் கொள்கைகளை உருவாக்குவது வெகுஜன ஊடகத் துறைக்கே வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இந்த நாட்டில் ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் அல்லது ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் சார்பில் மரிக்கார் எம்.பி. மற்றும் டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

related posts