அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.
இதன்பின்பு, இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ
பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.
இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார்.
பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட வைரத்தின் ரசாயன மற்றும் ஒளி பண்புகளை இந்த வைரம் பிரதிபலிக்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இருக்கும். சூரிய மற்றும் காற்று சக்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பன்முக தன்மை வாய்ந்த முறையில் அது தயாரிக்கப்பட்டு உள்ளது