Home இலங்கை தரம் ஆறிலிருந்து ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி

தரம் ஆறிலிருந்து ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி

by Jey

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு ஆரம்ப மட்ட பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து ஆரம்ப பிரிவினருக்கு அடிப்படை மட்டத்திலும் தரம் ஆறிலிருந்து ஜப்பானிய மொழியை ஒரு பாடமாக கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர் குழுவின் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

related posts