சீக்கிய மதத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென என்.டி.பி கட்சியின் தலைவர் ஜாக்மீட் சிங் கோரியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சீக்கிய ஆலயமொன்றின் தலைவர் ஹார்டீப் சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
கனடாவின் மிகப் பெரிய சீக்கிய ஆலயங்களில் ஒன்றான குரு நானாக் சீக் குருத்வா ஆலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்க்கோ மென்டிசினோவிடம் என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் சீக்கிய சமூகம் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.