அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது.
அதனருகில் பாலைவனம் ஒன்று உள்ளது. அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘மராயா’ என்ற சொல்லுக்கு ‘எதிரொளிப்பு’ எனப் பொருள்.
இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கண்ணாடி கட்டிடம் அமைப்பது சாதாரணமான காரியம் இல்லை. ஏனெனில் கண்ணாடியின் எதிரொளிப்பால் வீட்டின் உள்ளே வெப்பம் அதிகமாகும்.
இதற்கு தீர்வாக புதிய வகையான கண்ணாடி தாமிரத்தினால் செய்யப்பட்டது. கடுமையான வெப்பம் கண்ணாடியில் ஆக்சிஜனேற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே மராயா கட்டிடத்தின் கண்ணாடிக்கு சிறப்பு பூச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. இது மணல் புயல்கள், அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாலைவனத்தில் நிகழக்கூடிய பிற வானிலை சவால்களையும் சமாளிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது.