கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து உலக நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
முழு உலகத்தின் பார்வையும் தற்போது ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் ரஷ்யாவின் பக்கம் அனைவரின் பார்வையையும் திரும்பவைத்துள்ளது.
போரை உடனடியாக முடிவுக்குகொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றுள்ளது. எனினும், அதற்கு ரஷ்யா செவிசாய்த்ததாக தெரியவில்லை. உக்ரைன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திவந்தது.
இதுவரை காலமும் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்னர் குழு செயற்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் வாக்னர் குழுவினர் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பினர்.
புடின் மொஸ்கோவில் இருந்து தப்பியோட்டம்? பின்வாங்கியது வாக்னர் குழு
இதனால் உள்நாட்டு போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டது. ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டது. மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக வாக்னர் குழுவினர் அறிவித்தனர். தொடர்ந்தும் மொஸ்கோவை கைப்பற்றப்போவதாக தெரிவித்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி புடின் நாடு முழுவதும் படைகளை நிலைநிறுத்தினார். வீதிகளில் ஆயுதங்களுடன் படை வீரர்களை களமிறக்கினார்.
ஒரு கட்டத்தில் புடின் மொஸ்கோவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும், இதனை கிரம்ளின் முற்றாக மறுத்திருந்தது.
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையை கண்டு உக்ரேனியர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். உக்ரைன் ஜனாதிபதியும் புடினை கடுமையாக விமர்சித்திருந்தார்.