இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார்.
அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த பயணத்தின் போது இந்திய – அமெரிக்க பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு விருந்தும் வழங்கப்பட்டது.