சர்ரே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென் சர்ரே பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
ஒரு வாகனத்தைச் செலுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபான பயன்பாடு மற்றும் அதிக வேகம் ஆகிய காரணிகளினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.