இலங்கையில் வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விடுத்துள்ளார்.
அதன்படி வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு அத்தியாவசியமான வங்கி செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கிகளுக்கான விடுமுறை அறிவிப்பின் மூலம், எந்த வகையான வங்கி பரிவர்த்தனைகளும் குறிப்பாக வழக்கமான விடுமுறை நாட்களில் இணையம் மூலம் செய்யப்படும் வங்கி பரிவர்த்தனைகள்,
இவ்வளவு நீண்ட வங்கி விடுமுறை நாட்களிலும், மக்கள் தங்கள் வங்கித் தேவைகளைச் செய்ய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று அவசியமாக உள்ளதனால், எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.