Home கனடா கனடாவின் மொன்றியால் நகரின் காற்றின் தரம்…..?

கனடாவின் மொன்றியால் நகரின் காற்றின் தரம்…..?

by Jey

உலகின் பிரதான நகரங்களில் காற்றின் தரம் தொடர்பில் தகவல்கள் நாள்தோறும் திரட்டப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் உலகின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நகரமாக கனடாவின் மொன்றியால் நகரம் பதிவாகியுள்ளது.

காற்றின் தரத்தை அளவீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சுட்டிகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் கனடாவின் மொன்றியால் நகரின் காற்றின் தரம் 230 வளி மாசடைதல் புள்ளிகளை கொண்டிருந்தது.அதற்கு அடுத்தபடியாக குவைத் நாட்டின் குவைத் நகரத்தில் 221 புள்ளிகள் காணப்பட்டன.

வடக்கு கியுபெக்கில் நிலவி வரும் காட்டுத் தீ நிலைமைகளினால் இவ்வாறு மொன்றியாலில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது.

 

 

 

 

 

 

 

related posts