நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி கொண்டாடப்படும் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
சமூக நீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கருணாநிதியின் இரு கண்கள்.சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தனி கொள்கையை உருவாக்கியவர் கருணாநிதி.சிறு, குறு நடுத்தர தொழில் துறையினருக்காக 4 தனி குழுமங்கள் அமைக்கப்படுகிறது.
ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம். திண்டிவனம், திருமுடிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்பேட்டைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.