Home இலங்கை சீனாவில் இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்து கவனம்…

சீனாவில் இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்து கவனம்…

by Jey

கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்ய தயார் என சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் நிறுவனத்தின் தலைவர் வாய் இயன் சான் இதனைத் தெரிவித்துள்ளர்.

இந்த வருடத்திற்குள் குறிப்பிட்ட நிதியை கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சீனாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரியுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் அலி சப்ரி சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் பூலின் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக தாம் ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கியின் தலைவர் அங்கு உறுதியளித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

related posts