வடகொரியாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கொரிய போர் ஆரம்பமானதன் 73ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடகொரியத் தலைநகரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 120,000 பேர் வரை பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.