கனடாவில் இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டு கடந்த பத்து நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
10 நாட்களுக்கு முன்னர் அடுக்குமாடி வீட்டில் வைத்து தாக்கப்பட்ட
டொரண்டோவை சேர்ந்த 29 வயதான யாஸ்மின் அலி முகமது என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் அடுக்குமாடி வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யாஸ்மின் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 30 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை வழக்குப்பதியப்பட்டுள்ளது.
யாஸ்மினும், கைதான இளைஞரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா என்ற விபரம் தெரியவில்லை.
சம்பவம் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.