உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது.
ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த சம்பவம் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் தான் முடியும். ரஷிய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன.
வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. வாக்னர் படை ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம்.