கிழக்கிந்திய நிறுவனங்களை போல் தேசிய கட்சிகள் செயல்படுவதாகவும், எவ்வளவு கொள்ளையடித்தாலும் நாட்டின் வளங்கள் குறையாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் ஒருவிதமான அடிமைத்தனம் இருந்தது. அதன் பிறகு முகலாயர்கள் ஆட்சியில் வேறு விதமான அடிமைத்தனம் இருந்தது.
அதைத்தொடர்ந்து இங்கு வந்த கிழக்கிந்திய நிறுவனத்தினர் நமது நாட்டையே ஆட்சி செய்தனர். வணிகம் செய்ய வந்தவர்கள் நமது நாட்டை கொள்ளையடித்து சென்றனர். நமது நாட்டில் நாம் அவர்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதே போல் தற்போது உள்ள தேசிய கட்சிகள் ஒரு விதத்தில் கிழக்கிந்திய நிறுவனங்களை போல் செயல்படுகின்றன.
நமது நாடு கலாசாரம் கொண்டது. நமது நாடு வளங்கள் நிறைந்த நாடு. எவ்வளவு கொள்ளையடித்தாலும், இறைவன் நமக்கு கொடுத்துள்ள வளங்கள் குறையாது. காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போது கமிஷன் விஷயம் தொடங்குகிறது.