டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் வெறும் 3 கல்லூரிகள் மட்டுமே இருந்தன, இப்போது 90 கல்லூரிகளுக்கு மேல் உள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா பலவீனமான பொருளாதாரங்களின் பட்டியலின் கீழ் வந்தது, இன்று அது உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இன்று. டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.
சமீபத்திய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது.
2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 45ஆக உயர்ந்துள்ளது.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.