Home கனடா கூகுல் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு கனடா அரசாங்கம் எதிர்ப்பு

கூகுல் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு கனடா அரசாங்கம் எதிர்ப்பு

by Jey

கனடிய பயனாளர்களுக்கு இனி செய்தி இணைப்புக்களை வழங்கப் போவதில்லை என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையவழி செய்தி குறித்த பில் சீ-18 சட்டத்தின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கனடிய ஊடக நிறுவனங்களினால் பிரசூரிக்கப்படும் செய்தி இணைப்புக்கள் கூகுள் தேடுதளத்திலிருந்து நீக்கப்பட உள்ளது.
புதிய சட்டத்தின் அடிப்படையில் கனடிய ஊடக நிறுவனங்களினால் பிரசூரிக்கப்படும் செய்திகளுக்கு கூகுள் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டணம் செலுத்துவதற்கு கூகுள், மெட்டா போன்ற பிரதான நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதனால் கனடிய செய்தி இணைப்புக்களை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் எப்பொழுது இவ்வாறு கனடிய பயனர்களுக்கு செய்தி இணைப்புக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் பற்றிய திகதி விபரங்களை கூகுள் வெளியிடவில்லை.
இதேவேளை, கூகுள் நிறுவனம் பொறுப்பற்ற தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக கனடிய மரபுரிமைகள் அமைச்சர் பாப்லோ ரொட்ரிஜியுஸ் தெரிவித்துள்ளார்.

related posts