Home இந்தியா பாலாற்றில் நீராதாரத்தை பெருக்க தடுப்பணைகள்

பாலாற்றில் நீராதாரத்தை பெருக்க தடுப்பணைகள்

by Jey

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மணி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தடுப்பணைகள் மேல்அரசம்பட்டு பத்திரப்பள்ளி அணைகளை விரைந்து கட்ட வேண்டும்.

பாலாற்றில் நீராதாரத்தை பெருக்க தடுப்பணைகளை அமைக்க வேண்டும். வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

related posts